மகிந்தவின் பாதுகாப்பிற்கு சென்ற பாதுகாப்பு படையினரின் வாகனம் விபத்து-மூவர் படுகாயம்
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாத்தளை நகரிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பாதுகாப்பு பிரிவினர் சிலரை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அவருக்கு பாதுகாப்ப வழங்கச் சென்ற தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த இரு பிக்குகள் மற்றும் வானின் சாரதி ஆகியோர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வானின் கதவை உடைத்தே சாரதி வெளியில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses