இளைஞரின் உயிரைப் பறித்த காலிக் குமாரி
காலி குமாரி கரையோர ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் வாத்துவ, தல்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. .இச் சம்பவத்தில், திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயிலில் மோதுண்ட மேற்படி இளைஞனின் உடல், இரண்டு பகுதிகளாக வேறுபட்டதாகவும் அதில் ஒரு பகுதி, பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses