சிவப்பு மழைக்கு காரணம் ஒரு வகை அங்கி வகை உயிரினங்கள்- மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் சிவப்பு மழைக்கு காரணம் மழை நீரில் கலந்திருக்கும் அல்கா வகை உயிரினங்கள் ஆகும் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்தார். மேற்படி உயிரிணங்கள் ஒருகல உயிர் அங்கிகள் இனத்தைச் சேர்ந்தவை என்று சுட்டிக்காட்டிய டாக்டர் சமரநாயக்க, இவை மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட உயிவாழ்வனவாக இருப்பதுடன் பெருக்கமடையும் தன்மையையும் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவை குறித்த தமது அனுமானங்களை உறுதி செய்ய அவற்றை டி.என்.ஏ (மரபணு பரிசோதனை) மற்றும் ஆர்.என்.ஏ சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. இந்த சோதனைகளுக்காக பிரித்தானியாவிலுள்ள கார்டிவ் பல்கலைக்கழகத்துக்கு சிவப்பு மழை நீர் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகம் ஏற்கனவே, கேரளாவில் பெய்த சிவப்பு மழையை ஆராய்ந்து வருகிறது. இருந்தபோதிலும், இந்த சிவப்பு மழை மனிதனுக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா, இல்லையா என்பது குறித்துஇன்னும் கண்டறியவில்லை
இந்த சிவப்பு மழையால் இதுவரை எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், இறுதி முடிவுகள் வரும்வரை இதனால் பாதிப்பு ஏற்படுமா என்பதை கூறமுடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments
Write Down Your Responses