2013.04.17 முன் மட்டக்களப்பில் தேர்தல்!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று தெற்கு மற்றும் எருவில்பற்று, மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, ஏறாவூர்பற்று மற்றும் போரதீவுப்பற்று ஆகிய ஒன்பது உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதை அடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட 9 உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டதுடன் இந்த வருடம் நடாத்த படவேண்யெ உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை தேர்தல் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி ஒரு வருடத்துக்கு ஒத்திவைத்தார்.
இந்த ஒரு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதியுடன் முடிவடைகின்றதை அடுத்து, அத்திகதிக்கு முன்னர் அரசாங்கம் இந்த தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
0 comments
Write Down Your Responses