பொலிஸாரை சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக்கொன்ற முன்னாள் சிப்பாய்.
பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிறிபுர, முதுன்கம கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்று கூறப்படும் மேற்படி சந்தேகநபர், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் இதன்பொருட்டு விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீதே அவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ள சந்தேகநபர், பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments
Write Down Your Responses