உடவலவ வனத்தில் கஞ்சா சேனை விசேட அதிரடிப்படையால் முற்றுகை!
அம்பகமுவ பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடவலவ காட்டுவனத்தில் 10 ஏக்கர் காணியில் மேற்கொள்ளப்பட்டிருந்த கஞ்சா செய்கை விசேட அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எம்.றிஷாட்டின் ஆலோசனையின் பேரில் விசேட அதிரடி படையினரால் சுற்றி வளைப்பு நடைபெற்றபோதே இந்த கஞ்ஜா சேனையும் பெருந்தொகையான கஞ்ஜாவும் கைப்பற்றப்பட்டது இதனுடன் சம்மந்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்பட வில்லை என விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
0 comments
Write Down Your Responses