மலசலக் குழியில் வீழ்ந்து மூன்று வயது சிறுவன் பலி
மலசல கூடத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மூன்று வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக வீழ்ந்து மரணமாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் மட்டக்களப்பு ஓட்டமாவடியிலுள்ள ஓட்டமாவடி காகித நகர் அல் மஜ்மா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் பதுறுதீன் அப்துல் அஸீஸ் என்ற சிறுவனே மலசலகூடத்திற்காகத் தோண்டப்பட்டு மூடப்படாமல் மழை நீர் நிரம்பிக் கிடந்த குழிக்குள் விழுந்துள்ளான்.
குழந்தையைக் காணவில்லையென பெற்றோர், மலசலகூடக் குழியில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டு உடனடியாக மீட்டு, வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
0 comments
Write Down Your Responses