யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்
யாழ்.பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வெளியேறி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனோடு பல்கலைக்கழக சூழலில் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமைக்காக பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனாலேயே மாணவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் பலர் வெளியேறியுள்ள நிலையில் ஆண்கள் விடுதியிலும் மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.
0 comments
Write Down Your Responses