உலக முதலாளித்துவத்தின் மிருகத்தன முகம். Peter Symonds

சனிக்கிழமை இரவு அஷுலியா தொழிற்பேட்டையில் ஏற்பட்ட பங்களதேஷ் வரலாற்றிலேயே மிக மோசமான ஆலைத் தீவிபத்து, உலக முதலாளித்தவத்தின் மோசமான செயற்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இப்பெருந்தீயில் குறைந்தப்பட்சம் 112 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் அல்லது தீக்காயங்களினால் அல்லது தப்பிப்பதற்காக பெருந்திகைப்புடன் எட்டு மாடிக்கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து என்று இறந்து போயினர்.

எரியக்கூடிய ஜவுளி மற்றும் நூல்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தரைத் தளத்தில் தொடங்கிய தீ படிகள் எல்லாவற்றையும் அடைத்துவிட்டது. மற்ற வெளியேறும் வழிகளும் பூட்டப்பட்டிருந்தன.

எரிந்துவிட்ட டஜ்ரீன் பாஷன்ஸ் கட்டிடம் வரிசையாக எரியுண்ட பணி இடங்களைக் காட்டுகிறது; அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் முக்கிய ஐரோப்பிய, அமெரிக்கப் பெருநிறுவனங்கள், வால்மார்ட், C&A சில்லறைத் தொடர் கடைகள் அடங்கியவற்றிற்கு தயார் செய்து வந்தனர். அடிப்படை தீவிபத்து குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாத நிலை, நீண்ட மணி நேர வேலை, மட்டமான சூழ்நிலை மற்றும் குறைவூதியம் இவற்றுடன் இணைந்திருந்தது. தப்பித்தவர்கள் தங்களுக்கு மூன்று மாதமாக சம்பளங்களும் கொடுக்கப்படவில்லை, போனஸ்களும் வரவில்லை என்று விளக்கினர்.

தீவிபத்தை தொடர்ந்து உடனடியாக, நன்கு வாடிக்கையாகிவிட்ட மூடிமறைத்தல் நிகழ்வுகள் அனைத்துத் தரங்களிலும் வெளிப்பட்டன. இறப்புக்களைக் குறித்து அரசாங்கம், உள்ளூர் மற்றும் தேசிய அதிகாரிகளும், முதலாளிகள் குழுக்களும் ஒரு சில முதலைக் கண்ணீர் வடித்து, போலி விசாரணைகளுக்கு அறிவிப்புக்கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அற்ப இழப்பீட்டுத் தொகைகளையும் உறுதிமொழி கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் குறைகூறுபவர்களை மௌனப்படுத்தும் மற்றும் செய்திகளில் இருந்து இந்நிகழ்வு மறையும் வரை அமைதியின்மையை தடுக்கும் நோக்கத்தையும் கொண்டவை ஆகும்.

அதே நேரத்தில் பொலிசார், இராணுவத்தினர்கள், மற்றும் நாட்டின் இழிந்த விரைவுச் செயற்பாட்டுப் பிரிவு (RAB) ஆகியவை சம்பவ இடத்தில் திகைத்து கலங்கி நிற்கும் உறவினர்களுக்கு எதிராகவும், திங்களன்று வெடித்தெழுந்த தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை எதிர்த்தும் நின்றனர். தொழிற்துறைப் பகுதிகளில் பாதுகாப்புக்கள் அதிகமாக நிறுத்தப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், பிரதம மந்திரி ஷேக் ஹசினா வஜெட் பாராளுமன்றத்தில் எந்தவிதச் சான்றையும் கொடுக்காமல், தீ “முன்கூட்டித் திட்டமிடப்பட்டது” என்றார் —அதாவது ஒரு நாச வேலை, அரசாங்கத்தை ஸ்திரம் குலைக்க இது இயக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பங்களாதேசத்தில் இருந்து பொருடகளை வாங்கும் பெரும் உலகளாவிய நிறுவனங்கள் அனைத்தும் பெரும் துன்பியலில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொள்ள முற்பட்டுள்ளன. PVH, Nike, Gap, American Eagle Outfitters, பிரான்ஸின் நிறுவனமான Carrefour ஆகியவை தங்கள் பொருட்கள் டஜ்ரின் ஆடைகள் ஆலையில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்று அறிக்கையை வெளியிட்டனர். அதன் வணிக முத்திரைச் சின்னம் விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டபின், வால்மார்ட் தங்களுக்குப் பொருளை அளித்தவர்களை ஆலைக்கு துணை ஒப்பந்தம் மூலம் வேலை கொடுத்தது குறித்துக் குற்றம் சாட்டியது. தன் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க வேண்டும் என்றும் இது கூறியுள்ளது.

பங்களாதேசம் போன்ற நாடுகளில், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் பல ஆய்வு முறைகளை பாதுகாப்பு மற்றும் பணிநிலைமைகளுக்காக நிறுவியுள்ளன. இந்த கூறப்படும் சுதந்திர தணிக்கைகள், வணிக முத்திரைச் சின்னப் பெயர்கள், இலாபங்களை காக்கவும், சட்டபூர்வ பொறுப்பைத் தவிர்க்கும் வகையிலுமான சைகை மொழிச் சொல் விளையாட்டு ஆகும். ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர் C&A, டஜ்ரீனில் ஆடர்களைக் கொடுத்த நிறுவனம், அதன் கட்டாயத் தணிக்கை என்பது நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த மிகப் பெரிய நிறுவனங்கள் எதுவும், உற்பத்தி முறை, தரம், பொருட்களின் விலை என்று வரும்போது பங்களாதேச அடிமை உழைப்பு நிலையங்களில் செய்யப்படும் பொருட்களைப் பற்றி எந்தத் தவறும் கூறிவிடவில்லை. பணி நிலைமைகள் முன்னேற்றுவிக்கப்படுவது, பாதுகாப்புத் தரங்கள் உயர்த்தப்படுவது மற்றும் வறுமைத்தர ஊதியங்கள் உயர்தப்படுவது ஆகியவை விலையை உயர்த்திவிடும் என்பதை அவை நன்கு அறியுமாதலால் இதைப் பற்றி பொருட்படுத்தா தன்மையைத்தான் கொண்டுள்ளன.

டஜ்ரீன் பாஷன்ஸ் ஆலையிலுள்ள நிலைமைகள் ஒரு விதிவிலக்கானவை அல்ல; நடப்புவிதியை ஒட்டித்தான் இருந்தன. சனிக்கிழமைத் தீ என்பது 2006ல் இருந்து குறைந்தப்பட்சம் 500 உயிர்களைக் குடித்த தீவிபத்துக்களில் மிகவும் மோசமானது ஆகும். பங்களாதேசத்தில் உள்ள ஆடைத் தொழில்துறை, அதன் ஊதியங்கள் மலிவு கூலி உழைப்பு தளங்களில் மிகவும் குறைந்ததாக உள்ளதால் துல்லியமாக, சீனாவிற்கு பின்னர், உலகின் இரண்டாவது பெரியதாக கடந்த மூன்று தசாப்தங்களில் விரிவடைந்துள்ளது.

நேற்று பங்களாதேசத்தின் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆலைத்துறை முழுவதும் உள்ள இழிந்த நிலை குறித்து விவரமாக எழுதியுள்ளது: “ஆடை ஆலைகளில் சில உரிமையாளர்கள்தான் மாதாந்திர ஊதியம் கொடுக்கின்றனர், தொழிலாளர்களுக்குக் கூடுதல் நேர ஊதியமும் கொடுக்கின்றனர்.... பெரும்பாலான ஆலைகளில், உரிமையாளர்கள் வேண்டுமென்றே இரண்டு மாத ஊதியங்களையும் கூடுதல் நேர ஊதியத்தையும் பாக்கியாக நிறுத்தி வைக்கின்றனர். தொழிலாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் பணிநீக்கம் செய்வதிலும் நிர்வாகம் தன்விருப்பப்படி நடந்து கொள்கிறது; பெரும்பாலான இடங்களில் நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாக்கிகள் கொடுக்கப்படுவதில்லை. மேலும் வாராந்திர விடுமுறை இல்லாத நிலையில், தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் உடலளவிலும் மனத்தளவிலும் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர்.

“பங்களாதேசத்தில் பெரும்பாலான ஆடை ஆலைகள் குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கொண்டிருக்கவில்லை; தேவையான தீயணைப்புக் கருவிகள்கூட ஆலைகளில் இல்லை. டாக்காவில் கிட்டத்தட்ட 227 ஆலைகள் அவசரகால வெளியேறும் வாயில்களைக் கூட கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான ஆலைகள் தேவையான மாதாந்திர வெளியேறும் பயிற்சியை நடத்துவது இல்லை.... தேசியத் தொழில்துறை ஆய்வுகளின்படி, முழுத் தொழில்துறைக்கும் ஐந்து சோதனை ஆய்வாளர்கள்தான் உள்ளனர்— 1970களில் தொழில்துறை தொடங்கியபோது இருந்த எண்ணிக்கையும் இதுதான்.

இத்தகைய முதலாளித்துவச் சுரண்டல் குறித்த பேரழிவுச் சித்திரத்தை அளித்தபின், வணிகச் செய்தித்தாள் முதலாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் “நம் ஆலைத்துறையைச் சரி செய்யவும்” என்னும் வெற்று அழைப்புடன் கட்டுரையை நொண்டித்தனமாக முடிக்கிறது. ஆனால் அரசாங்கம், முதலாளிகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்ககள் கொண்டிருக்கும் சிந்தனையோ வேறுவகை ஆகும்; தொழிற்சங்கங்களுடன் இணைந்து அவை பொது விமர்சனங்கள், சிற்றம் ஆகியவற்றை திசைதிருப்ப முயல்கின்றன; அதையொட்டி ஆலைகள் திறந்திருக்கும், இலாபங்கள் ஆண்டிற்கு 19 பில்லியன் டாலர் என இந்த ஏற்றமதித் தொழிலில் இருந்து என்பது தொடர்ந்து பெறுவர்.

பங்களாதேசத்தில் வணிகங்கள் என்பவை ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும்பிற இடங்களில் இருக்கும் அவற்றின் போட்டியாளர்களுடன் கழுத்தை அறுக்கும் போட்டியை கொண்டவை. இந்நாடுகளில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளும் பாதுகாப்புத் தரங்களும் பங்களாதேசத்தில் இருப்பவற்றைவிட வேறுபட்டவையல்ல.

1993ம் ஆண்டு தாய்லாந்தில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் ஆலையின் இறப்பு எண்ணிக்கையான 188 ஐயும் விஞ்சி, கடந்த செப்டம்பர் மாதம் 300 பேரின் உயிர்களைக் குடித்த உலகின் மோசமான ஆலைத் தீவிபத்து பாக்கிஸ்தானில் அலி என்டர்பிரைஸில் நடந்தது. இரு இடங்களின் நிகழ்வும் ஒன்றுதான்: தீப்பிடித்தால் அவசரமாக வெளியேற முடியாது; தடைக்குட்பட்ட படிக்கட்டுக்கள்; மூடப்பட்ட கதவுகள்; தீயில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் இல்லாத நிலையில், சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் ஜன்னல்களில் இருந்து குதிக்க கட்டாயப்படுத்தப்பட்டு அதையொட்டி இறப்புக்கள் நிகழ்கின்றன. மக்கள் சீற்றம் தணிந்ததும் வணிகம் மீண்டும் பழைய நிலைமையை தொடரும்.

நிலைமைகளும் பாதுகாப்புத் தரங்களும் உயரும் என்பதற்கு முற்றிலும் மாறாக, மோசமாகிவரும் உலகப் பொருளாதார நெருக்கடி, போட்டியிடும் பெரும் போராட்டத்தில் உள்ள நிறுவனங்களை செலவைக் குறைக்கும் புதிய சுமைகளைத் தொழிலாளர்கள் மீது சுமத்தவும் உந்துதல் கொடுத்துள்ளது. வளர்ச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள் எனக்கூறப்படுபவற்றில் உள்ள ஊதியங்களும் பணிநிலைமைகளும் முன்னேற்றம் அடைந்த முதலாளித்துவ நாடுகளுக்குக் கூட அடையாளங்கள் ஆகிவிட்டன. ஏற்கனவே ஐரோப்பாவில் கடன் நெருக்கடியின் மையத்தில் இருக்கும் கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் இத்தாலியில் வாழ்க்கைத் தரங்கள் பெரும் அரிப்பிற்கு உட்பட்டுள்ளன.

டஜ்ரீன் பாஷன்ஸ் தீவிபத்து போன்ற பெரும் துன்பியல்கள் அரசாங்கங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் முறையீடு செய்வதின் மூலம் நிறுத்தப்பட முடியாதவை. அத்தகைய குற்றங்களுக்கு முடிவு கட்ட ஒரே வழி, உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தன இலாபமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சமூகத்தை திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தின் அடிப்படையில் மறுசீரமைப்பத்கு ஐக்கியப்பட்டு போராடுவதுதான். இந்தப் புரட்சிகர முன்னோக்கிற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே போராடுகிறது

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News