பல்கலைக்கழத்தில் மாவீரர் தினத்தை முன்னெடுத்த மாணவர்கள் நால்வர் கைது?
யாழ்.பல்கலைக்கழத்தில் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் தினச் செயற்பாடுகள் தொடர்பில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நள்ளிரவு இவர்கள் அனைவரும் தங்கியிருந்த இடங்களில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களின் கைது பல்லைக்கழக மாணவர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்து.
0 comments
Write Down Your Responses