நீதிமன்றத்தில் சட்டத்தரணியின் மொபைலை திருடியவர் கைது!
கொழும்பு – மாலிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தினுள் சென்று சட்டத்தரணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவர் சேதவத்த, புதிய காலணி என்ற வசிப்பிடத்தைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவராவார்.
தனது கையடக்க தொலைபேசி துலைந்தது தொடர்பில் சட்டத்தரணி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யதைத் தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யும் வேளையில் அந்த கையடக்கத் தொலைபேசியில் இருந்த சிம் அட்டை அகற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments
Write Down Your Responses