கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நாலாம் மாடிக்கு - பொலிஸ் பேச்சாளர்
கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் தற்போது அவர்களிடம் வவுனியா பிரதேசத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே இவர்கள் நால்வரையும் கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments
Write Down Your Responses