வாழைப் பழத்தினுள்ளே வைத்து போதைப் பொருளை கடத்திய பெண் கைது
வாழைப் பழத்திற்குள்ளே மறைத்து வைத்த நிலையில் காலிச் சிறைச்சாலைக்குள் போதைப் பொருளை எடுத்து செல்வதற்கு முயன்ற பெண்ணொருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைதியொருவரைப் பார்வையிடச் செல்வதாகத் தெரிவித்து சிறைக்குள் சென்ற இப்பெண் வாழைப்பழத்துக்குள் மறைத்துவைத்து வைத்தே; போதைப்பொருளை எடுத்துச்செல்வதற்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய தகவல்களை அடுத்தே பொலிஸார் அந்த பெண்ணை இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் சிறைச்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments
Write Down Your Responses