கொழும்பு துறை முகத்தில் பெண்ணின் சடலம் மீட்பு
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு ஆசிய இறங்குதுறை நுழைவாயிலில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலமானது கிராண்ட்பாஸில் காணாமல் போனதாகக் கூறப்படும் பெண்ணினது சடலமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த சடலத்தை அடையாளம் காட்டுமாறு காணாமல் போனதாகக் கூறப்படும் பெண்ணின் உறவினர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments
Write Down Your Responses