மாடல்கள் அரைகுறை ஆடைகளுடன் வலம்வருவதை ஏற்க முடியாது :பாகிஸ்தான்
இந்திய மாடல்கள் இடம்பெறும் விளம்பரங்களுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்க புதிய தீர்மானமொன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும் பெண் செய்தியாளர்கள் தலையை மறைத்து துப்பட்டா அணிய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு நிலை குழு வெளியிட்ட தீர்மானங்களின் போதே இப்பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. இப்பரிந்துரையை அமைச்சர் கமர் சமான் கெய்ரா அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே வரும் விளம்பர மாடல்கள் அரைகுறை ஆடைகளுடன் வலம்வருவதை ஏற்க முடியாது எனவும், பாலிவூட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப், கிரீம் விளம்பரமொன்றுக்கு ஆபாச உடை அணிந்திருப்பதை குடும்பத்தினருடன் பார்க்க முடியாது எனவும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதவான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
0 comments
Write Down Your Responses