அரச இலையால் கையடக்க தொலைபேசி பேட்டரியை சார்ஜ் செய்துவிடலாம் (vedio)
இனி உங்கள் கையடக்க தொலைபேசி சார்ஜ் தீர்ந்துவிட்டதா இதோ ஒரேயரு அரச இலை இருந்தால் போதும் கையடக்க தொலைபேசி பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம் என ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட கையடக்க தொலைபேசியை ஈஸியாக சார்ஜ் செய்யலாம்.
ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி ஒரு ஆட்டோ டிரைவர் இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த கையடக்க தொலைபேசி தவறி விழுந்ததில் கையடக்க தொலைபேசியில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது.
சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் கையடக்க தொலைபேசியை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை. எனினும் வெளியில் மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக கையடக்க தொலைபேசியை பக்கத்தில் இருந்த அரச மர இலையை பறித்து கையடக்க தொலைபேசியை சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம் கையடக்க தொலைபேசி முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.
செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது. அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆகியுள்ளது.
0 comments
Write Down Your Responses