மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் கோயிலுடைப்பு. இருவர் பிடிபட்டனர்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக கோயில்கள் உடைக்கப்பட்டு அங்குள்ள பெறுமதி மிக்க சிலைகள் உண்டியல்கள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு வருகின்றது. கடந்த 24 ஆம் திகதி 2230 மணியளவில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த 12ம் படையணியினர் கையில் சிலையொன்றை கொண்டுவந்து நபரொருவரை தடுத்து விசாரரித்தபோது , அவர் கொண்டு வந்தது கோயிலொன்றொன்றிலிருந்து களவாடப்பட்ட சிலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்த சிலை ஐயங்கேணி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து களவாடியதாக கள்வன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
கள்வன் சிவராஜ் எனப்படுகின்ற 29 வயதுடைய பிரதான வீதி, வந்தாரமுல்லை யை நிரந்தர முகவரியை கொண்டவன் எனத் தெரியவருகின்றது. இவன் மேலதிக விசாரணைக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநநேரம் கடந்த 15 07 2013 ம் திகதி இரவு தாளங்குடா ஸ்ரீ வீரம்மாள் கோவிலில் இருந்த உண்டியல்; உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதை மறுநாள் 16.07.2013 உணர்ந்த பூசகர் ஆலய நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முறையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, பிரதேசத்தில் பல களவுகளை மேற்கொள்வதாக சந்தேகிக்கும் நபர் ஒருவர் தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். நிலைமையை உணர்ந்த நபர் உடனடியாக தலைமறைவாகியதை அடுத்து பொலிஸார் வியூகம் ஒன்றை வகுத்து அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பூங்கையடி வீதி, புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி யை சேர்ந்த அழகய்யா சந்திரன் எனத் தெரியவருகின்றது.
இவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இங்கே.
0 comments
Write Down Your Responses