யாழ்.கோட்டைக்குள் அரைநிர்வாணமாக உல்லாசம் அனுபவித்த வெளிநாட்டு ஜோடி கைது
வெளிநாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவில் வந்த சுவிஸ் நாட்டுப் பிரஜைகளான இருவரும், யாழ் கோட்டைப் பகுதியில் அரை நிர்வாண கோணத்தில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டில் இளம் ஜோடி இன்று(26.07.2013) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது இடத்தில் அநாகரியமான முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டதுடன் குறித்த இருவரும் கணவன்-மனைவி எனக் குறிப்பிடுகின்ற போதும் அதனை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இவர்களிடம் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
0 comments
Write Down Your Responses