30,000 கிலோ ரயிலை தள்ளி பெண்ணை உயிருடன் மீட்ட சக பயணிகள்

டோக்­கி­யோ­வுக்கு அண்­மை­யி­லுள்ள சைதாமா நகர ரயில் நிலை­யத்­தி­ல் சுமார் 30,000 கிலோ­கிராம் நிறை­யு­டைய ரயிலை பயணிகள் இணைந்து நகர்த்தி, அதன்கீழ் சிக்­கி­யி­ருந்த பெண்­ணொரு­வரை உயி­ருடன் மீட்ட சம்­ப­வ­மொன்று ஜப்­பானில் இடம்­பெற்றுள்ளது.

காலை சன நெரி­சலில் பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருந்த ரயில் நிலை­யத்தை வந்­த­டைந்த ரயி­லி­லி­ருந்து 30 வயதுப்பெண்ணொ­ருவர் தரிப்பு மேடைக்கும் ரயி­லுக்­கு­மி­டையில் தவறி வீழ்ந்­ததால் ரயில் நிறுத்­தப்­பட்­ட­து. இதனைத்தொடர்ந்து ரயில் நிலைய அதி­காரிகள் இச்­சம்­பவம் தொடர்பில் மக்­க­ளுக்கு அறி­வித்து உத­வும்­படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்­கி­ருந்த சுமார் 40 பயணிகள் மற்றும் 12 ரயில் நிலைய அதி­கா­ரிகள் இணைந்து 29030 கி.கி நிறை­யு­டைய ரயிலை பக்­க­வாட்டில் தள்ளி அதன் கீழ் சிக்­கி­யி­ருந்த பெண்ணை உயி­ருடன் மீட்­டுள்­ளனர்.

பெயர் வெளி­யி­டப்­ப­டாத அப்பெண் தரிப்பு மேடைக்கும் ரயிலுக்கும் இடை­யி­லான 8 அங்குலம் அள­வி­லான மிகச் சிறிய இடத்­தி­லேயே சிக்கித் தவித்­த பெண்மணியை சம­யோ­சி­த­மாக செயற்­பட்ட அதி­கா­ரிகள் பய­ணி­களின் உத­வி­யுடன் 8 நிமி­டங்­களில் மீட்டு வைத்­தி­ய­சாலையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

இச்­சம்­ப­வத்­தினால் ஜப்பான் ரயில் சேவை 8 நிமி­டங்­களால் தாம­த­ம­டைந்­தமை குறிப்பிடத்தக்கது.

0 comments

Write Down Your Responses

Text here

About This Blog

Lorem Ipsum

Visitors

Lorem Ipsum

Lorem

Advertise

Moto GP News

கட்டுரை

srilanka news

Formula 1 News

Pages

Sport News

nc2

Featured Content Slider

Powered by Blogger.

Search Wikipedia

Search results

Translate

Search This Blog

Basketball News