பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனுக்கு 1000 ஆண்டுகள் சிறை!
அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் வசித்துவந்தவன் ஏரியல் கஸ்ரோ என்ற 53 வயது நபர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ் (14) என்ற மூன்று பெண்களை கிளீவ்லாந்து வீதிகளில் கடத்திச் சென்று தனது வீட்டிற்குள் சிறை வைத்திருந்தார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர்களை வெளியே விடாமல் அடைத்து வைத்து அவர்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்ததுடடன் அந்தப் பெண்களில் ஒருவர் கர்ப்பமடைந்தபோது, அவருடைய கருக்கலையும் வரை அடித்து உதைத்து பட்டினி போட்டிருந்தபோது 2013 மே மாதம், இந்தப் பெண்களில் ஒருவர் தப்பித்து வெளியே வந்தபோது தான் இந்தக் கயவனின் சுயரூபம் வெளியே தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறை மற்றப் பெண்களையும், பெர்ரிக்குப் பிறந்த ஆறு வயது சிறுமியையும் விடுவித்திருந்தது சில மாதங்கள் கழித்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோக்காட்சி ஒன்றில் தோன்றிய அந்த மூன்று பெண்களும் தங்களுக்குத் தனிமை தேவைப்படுவதாகவும் காஸ்ட்ரோ மீதான வழக்கை விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
குற்றவாளி காஸ்ட்ரோவைக் கைது செய்த பொலிஸார், அந்நபர் மீது 977 குற்றங்களைப் பதிவு செய்ததுடன் நீதிமன்றத்துடன் அவன் மேற்கொண்ட மனு ஒப்பந்தத்தின் பேரில் அவனுக்கு பிணையில் வரமுடியாதவண்ணம் ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் அவனது சொத்துகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஒப்பந்தம், அவன் மீது மேற்கொண்டு எந்தக் குற்றங்களும் சுமத்தப்படாமலும், மரண தண்டனையிலிருந்தும் காக்கின்றது. பெண்கள் சிறை வைக்கப்பட்டிருந்த வீடு இடிக்கப்படும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளார்.
0 comments
Write Down Your Responses