பால்மா வகைகளில் இராசயனம் கலப்பு
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பால்மா வகைகள் பலவற்றில் டிசிடி (DCD my;y J Dicyandiamide) என்ற ரசாயன பொருள் கலந்திருப்பதாக தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பால்மா வகைகளில் டிசிடி இரசாயனம் கலந் திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த சர்ச்சைகளின்போது, சுகாதார அமைச்சும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையும் அது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தன.
இந்த பால்மா வகைகளில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் இல்லை என்று சுகாதார அமைச்சும் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சு, தனியான ஆய்வொன்றை நடத்தி, வெளிநாட்டு பால்மா வகைகளில் டிசிடி கலந்திருப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.
DCD என்பது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற அல்லது வைக்கோலுக்கு பயன்படுத்துகின்ற ஒருவகை இரசாயனப் பொருள். நாங்கள் ஆய்வுக்குட்படுத்திய வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எல்லா பால்மா வகைகளிலும் இந்த DCD இராசயனம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று தொழிநுட்ப ஆய்வுத்துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் தனுஷ்க ராம நாயக்க தெரிவித்தார்.
இலங்கை நுகர்வோர் அதிகார சபைக்கும் சுகாதார அமைச்சுக்கும் சுங்கத்துறைக்கும் தொழிநுட்ப ஆய்வுத் துறை அமைச்சு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த பால் மாவகைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்வதை அனுமதிப்பதா அல்லது இலங்கையில் தடை செய்வதா என்ற தீர்மானத்தை நுகர்வோர் அதிகாரசபையும் சுகாதார அமைச்சும் எடுத்தால் அதன்படி நாட்டின் சுங்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்று தனுஷ்க ராமநாயக்க கூறினார்.
0 comments
Write Down Your Responses