இலங்கையில் கட்டுண்டு போயுள்ள ஊடக சுதந்திரம்
இலங்கையில் 2012 ஆம் ஆண்டிலும் ஊடகவியலாளர்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் ஊடக சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதாக ப்ரீடம் ஹவுஸ் என்னும் உலக ஊடக சுதந்திர அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவான தேசிய செயற்திட்டத்தில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது குறித்த பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக் கப்பட்ட போதிலும், உண்மையில் அந்தப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்ப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், வேறு சட்டங்களின் மூலம் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. 1979 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக பல்வேறு கெடுபிடிகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses