பஸ்சுக்கு இருந்த இளம் பெண்ணுக்கு முத்தமிட்ட முதியவர் கைது!
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று(23.07.2013) செவ்வாய்கிழமை காலை பஸ்சுக்காக காத்து இருந்த இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப் பெண்ணை முத்தமிட்ட முதியவரை அங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பஸ்சுக்காக காத்து இருந்த இளம் பெண்ணின் மார்பகத்தை வருடியதுடன் அப் பெண்ணை முத்தமிடுவதற்கு முயற்சித்த முதியவரின் செயற்பாட்டால் நிலை குலைந்த இளம் பெண் கூக்குரல் எழுப்பியதில் அருகில் பஸ்சுக்காக காத்து நின்றவர்கள் முதியவருக்கு அடி உதை
கொடுத்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த பெண் தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவிப்பதற்கு வெக்கப்பட்டதுடன் அங்கு நின்ற ஆட்டோ ஒன்றில் ஏறிச் சென்றுள்ளார்.
0 comments
Write Down Your Responses