12 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 24 வயது இளைஞன் கைது
புத்தளம் மாவட்டம் கொஸ்வத்த – மீகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியை கடந்த 8ஆம் திகதி கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயதான இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச்சிறுமி குறித்த இளைஞனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவருடன் சிறுமி விரும்பிச் சென்றுள்ளதாக தாயார் அறிந்து கொண்டதன் பின் சிறுமியின் தாய் தனது மகள் காணாமற்போனமை தொடர்பில் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் குறித்த சிறுமி கடந்த 28ஆம் திகதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சிறுமி தாயாரிடம் தான் தனது காதலனுடன் விரும்பிச் சென்றதாகவும் பொலன்நறுவை – மன்னம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் கணவன், மனைவியாக கடந்த நாட்களாக வாழ்ந்ததாகவும் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அறிந்த தாயார் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments
Write Down Your Responses