இலங்கையில் புதிய வகை நுளம்புகள் கண்டுபிடிப்பு!
நாட்டின் பல பகுதிகளிலும் நுளம்பு குறித்து மேற்கொண்ட பரிசோதனையில் பொரளை வைத்திய பரிசோதனை நிலையம் இலங்கையில் புதிய நுளம்பு இனமொன்றை கண்டுபிடித்துள்ளது.
டெங்கு நுளம்புகள் பரவிக் கிடக்கும் இடங்களில் இந்த புதிய நுளம்பு இனம் காணப்படுவதுடன் இந்த புதிய நுளம்பு இனம் டெங்கு நுளம்பு முட்டைகளை உண்பதாக முதல்கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பை போல் காணப்படும் இந்தப்புதிய நுளம்பு மனித இரத்தத்தை உரிஞ்சுகிறதா என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சுமார் 124 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் புதிய நுளம்பு இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இதுவரை 17 நுளம்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments
Write Down Your Responses