யாழ்.போதனா வைத்திய சாலைக்கு 350 மில்லியன் ரூபாவில் புதிய இருதய சத்திரசிகிச்சைப்பிரிவு
யாழ்.போதனா வைத்தியசாலையில் 350 மில்லியன் ரூபா செலவில் புதிதாக இருதய சத்திரசிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத் தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதி ராஜா தெரிவித்தார்.
இருதயக்கூறு, இருதய சத்திரசிகிச்சைப் பிரிவுகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இந்த நிலையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அரசசாரா நிறுவனம் ஒன்று இதற்கான பணத்தை வழங்க முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த புதிய பிரிவு தற்போது விடுதியிலுள்ள நோயாளர்களது சமையலறைக் கட்டடத் தொகுதி அகற்றப்பட்டு அந்த இடத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
0 comments
Write Down Your Responses