மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் யாழில் கைது!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திறக்கு உட்படுத்தியமை தெடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பதிவு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பாடசாலையொன்றின் ஆசிரியர் கடந்த மே, யூன் மாதம் 13, 14 வயதுடைய சிறுமிகளுடன் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறிப் பதிவுசெய்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் கைதுசெயயப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments
Write Down Your Responses