வடக்கில் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சர் யார் என்பதை நானே தீர்மானிப்பேன்! - தேவானந்தா
வட மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றிபெற்றால், புதிய முதலமைச்சர் யார் என்பதை நானே தீர்மானிப்பேன் என ஈ.பீ.டீ.பீ அமைப்பின் தலைவர் பீ.பீ.ஸி. வானொலிச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
‘வட மாகாண சபைத் தேர்தலுக்கு தலைமை வகிப்பது நான். அதனால் முதலமைச்சரைத் தெரிவு செய்யும் உரிமை எனக்குள்ளது. ஜனாதிபதி கூட இதனை ஏற்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் கீழ் ஈ.பீ.டீ.பீ அமைப்பு போட்டியிட முன்வந்துள்ளதாகவும் அவர் அச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
தங்களது கட்சி தற்போது ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளதையும், அரசாங்கத்தின் உதவியின்றி மாகாண சபையொன்றை வழிநடாத்திச் செல்வதென்பது இயலாத காரியம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ள அமைப்பின் தலைவர், தாம் அந்த முடிவுக்கு வரக்காரணம் இதுவென்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் நடைபெறவுள்ள தேர்தலில் களம் குதித்துள்ள ஆளும் கட்சிக் குழுவினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆசனங்களில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஆசனங்களை ஈபீடீபி அமைப்புக்கே பொறுப்புச் சாட்டியுள்ளது.
இம்முறை போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது விட்டாலும் வடக்கின் முதலமைச்சர் பதவியே தனது கனவு என்றும் அமைச்சர் தேவானந்த பீபீஸி சேவைக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses