வவுனியாவில் தங்கச்சங்கிலியை அறுத்த நகர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு..!
வவுனியா குருமண்காடு சந்தியில் சனநடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் யுவதியொருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியினை நபர் ஒருவர் அறுத்து எடுத்ததுக்கொண்டு தப்பியோட முற்பட சம்பவம் நேற்று(26.07.2013)மாலை நடைபெற்றது.
அதனால் அதிர்ச்சியுற்ற யுவதி போட்ட சத்தத்தினால் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி திருடனை மடக்கிப்பித்ததுடன் அவரை நையப்புடைப்பு செய்ததுனர். சம்பவம் அறிந்து வந்த பொலிசார் பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்டு கைதுசெய்து அழைத்துச் சென்றதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments
Write Down Your Responses