தேவை ஏற்படின் விக்னேஸ்வரனுடன் பேசலாம்-ஜனாதிபதி
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் விக்னேஸ்வரனது கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அலரி மாளிகையில் ஜனாதிபதியிடம் கேள்வினொன்றை முன்வைத்தார் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவை ஏற்படின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாத நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார் அவ்வாறாகவே இம்முறை தேர்தலும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 comments
Write Down Your Responses