யாழ்.பல்கலை மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்!
யாழ். பல்கலைக்கழக கலைப் பீட இறுதியாண்டு மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையேயே இன்று(31.07.2013)புதன்கிழமை நண்பகல் வளாகத்தில் கைகலப்பு ஏற்பட்டதுடன் இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது மட்டுமல்லாது பல்கலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளது இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரியரட்ணம் தலைமையிலான நிர்வாகம் கலைப்பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் விடுதிகளிலிருந்தும் வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
0 comments
Write Down Your Responses