பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் பலி எண்ணிக்கை 2௦ ஆக உயர்வு
பீகார் மாநில அரசு பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களின் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்ததுள்ளதுடன் பாதிக்கப்பட்ட 50 மாணவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதுடன் பெண் சமையலாளர் உள்ளிட்ட மேலும் 27 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று முதன்மை கல்வி துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மதிய உணவு தயாரிக்க கெட்டு போன சமையல் எண்ணை பயன்படுத்தியதே இதற்கு காரணம் என்று தெரியவந்ததுள்ளதுடன் சம்பவ இடத்துக்கு மாவட்ட அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து சென்று விசாரித்ததில் பள்ளிக்கூடத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணையை பார்த்த போது அது கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதே வேளை பலியான குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் ரூபா நிவாரண உதவி வழங்கப்படும் என்று பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
0 comments
Write Down Your Responses