பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்புகளுக்கு கண் இமையும், வெளிக்காதும் கூட கிடையாது, பாம்புகள் வெளி வெப்ப நிலைக்குத் தகுந்தாற் போல தன உடல் வெப்பத்தை வைத்திருப்பவை. இவைகளுக்கு தாடையில் எலும்பு கிடையாது. எனவே எவ்வளவு பெரிய உணவானாலும் விழுங்க முடியும். இன்னொரு முக்கியான விஷயம் நமக்கு ஜோடி ஜோடியாக உள்ள அனைத்து உறுப்புகளும் இவைகளுக்கு ஒத்தையாகவே உள்ளன. முதன்மையாக ஒரே ஒரு நுரையிரல் மட்டுமே உண்டு.
உலகில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன என்று பார்த்தால் பாம்பில் 15 குடும்பங்களும் 2900 இனங்களும் உள்ளன. இவற்றில் 10 செ.மீ உள்ள நூல் பாம்பிலிருந்து, 7 .9 மீ நீளமுள்ள அனகோண்டா வரை உண்டு. இதுவரை உலகில் வாழ்ந்த பாம்புகளில் மிகப் பெரியது.58 -60 மில்லியன்ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைடானிக் போயா தான். இதன் நீளம்12-15 மீ ஒரு மீட்டர். விட்டம்1 மீ. எடை, 1385 கிலோ.
உலகிலுள்ள பாம்பு இனங்களில் ஒரே ஒரு பாம்பு மட்டும் பறவை போல கூடு கட்டும். அதில் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். அதுதான் ராஜ நாகம். இதன் நீளம் 5 .5 மீ.ராஜ நாகத்திலே 200 இனங்கள் உள்ளன. இவை மற்ற நாகப் பாம்புகளை விட புத்திசாலித்தனம் நிறைந்தவை. இவை இணை சேரும் சமயத்தில், இணையைக் கண்டு பிடிப்பதற்காகவே, ஒருவித வாசனையை காற்றில் கலக்க விடும். ஆண் பெண் இரு பாம்புகளுமே, புனுகு வாசனையை வெளிவிடும். இணை சேர்ந்த 2 மாதம் கழித்து, ராணி நாகம் முட்டை இடும். பின் இரண்டு மாதம் சென்ற பின் அவை பொரிக்கும். முட்டையை ராணி நாகம் இலை, செத்தை, மரக் குப்பைகள் போட்டு கூடு கட்டும், அடை காக்கும். தந்தை முட்டையையும் அம்மாவையும் காவல் காக்கும்.
இது20 தொடக்கம் 40 முட்டைகள் இடும் ஆண் அடை காக்கும் பெண் பாம்பையும் முட்டையையும் சேர்த்து பாதுகாக்கும் .பெண் பாம்புதான் ஆண் பாம்புடன் சேர்ந்து முட்டையை தரையில் அடை காக்கும். அடைகாக்கும் காலம் 60-90 நாட்கள் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் 50 செ.மீ நீளத்தில் இருக்கும். முட்டையிலிருந்து குழந்தை ராஜநாகம் வெளி வந்ததும் ராணி விலகிப் போய் தன பணிகளை பார்க்க போய்விடும். குட்டிகள் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும். அதனுடைய விடமும் கூட முதிர்ந்த பாம்பின் நஞ்சு போலவே வீரியம் மிக்கது.
நாகப்பாம்புக்கு நன்றாக கண் தெரியும், இரவிலும் கூட.! ராஜநாகத்தின் கண் பார்வை மற்ற பாம்புகளைவிட கூர்மையானது. தன் எதிரில் உள்ள பொருளை 330 அடி தூரத்திலேயே நன்றாக கவனித்து விடும் ராஜ நாகம் மற்ற பாம்புகளையே உணவாகக் கொள்ளும்.பாம்புகள் கிடைக்காவிட்டால் இவை, ஓணான், பறவைகள், அணில் போன்றவற்றையும் உண்ணும். பாம்புகள் மிக மெலிதான வெப்ப மாறுபாட்டைக் கூட உணரும் தன்மை பெற்றவை. இதற்காகத்தான் அது அடிக்கடி நாக்கை வெளியில் நீட்டுகிறது.
குட்டியூண்டு உறுப்பான ஜகோப்சன் உறுப்பு இதன் மேல் தாடையில் உள்ளது. அதன் மூலம் இது வெப்பத்தை உணருகிறது. மற்ற பாம்புகள் போலவே, இதுவும் பிளவுபட்ட நாக்கின் மூலம் இரையின் வாசனை உணர்ந்து அது இருக்கும் திசையையும் அறிகிறது. இந்த பிளவுபட்ட நாக்கு ஸ்டீரியோ போல செயல்படுகிறது.மேலும், இதன் உதவியால்தான் பாம்பு இரவிலும் தன் இரையைப் பிடிக்கிறது. ராஜ நாகம் மற்ற பாம்புகள் போல் இரையை அரைத்து உண்ணாது. அப்படியே முழுங்கிவிடும்.
ராஜநாகம் மூர்க்க குணம் உள்ளது. நாகப்பாம்பின் நஞ்சுநேரடியாக நரம்பு மண்டலத்தைத்தான் தாக்கும்.அனைத்து பாம்புகளின் நஞ்சும் புரதம் தான். ராஜ நாகம் கடித்ததும், அந்த கடி சுமார் 1 .5 செ.மீ ஆழமான காயத்தை நம் உடம்பில் உண்டுபண்ணும். விடம் நேரடியாக மைய நரம்பு மண்டலத்தை தாக்கும். உடனே கடுமையான வலி ஏற்படும். அதைத் தொடர்ந்து கண் பார்வை குறைந்து, தலை சுற்றி, உடனடியாக பக்கவாதம் உண்டாகும்.இதய இரத்த குழாய்கள் சிதைந்து, கோமா நிலை ஏற்படும். பிறகு மூச்சு திணறலால் இறப்பு நிகழும். ராஜ நாகத்தின் நஞ்சு மிகவும் வீரியமுள்ளது. ஆனால் ஒரே கொத்துதான் அதிலேயே ஒரு யானை கூட வீழ்ந்து, இறந்தும் போகும்.
அந்த அளவுக்கானஅதிக நஞ்சை ஒரு போடும் போடும்போதே, நஞ்சை செலுத்தி விடும். ஒரு கடியில் சுமார் 7 மி.லி விடத்தை செலுத்தும்.ஒரு முறை கொத்தும்போது 20 பேரை கொல்லும் அளவுக்கு அதில் நஞ்சு அதில் இருக்கிறது. பொதுவாக ராஜ நாகம் கடித்தால் ஒருவர் அதிகபட்சம் 15 நிமிடத்துக்குள் இறந்து விடுவார். பெரும்பாலும் ராஜ நாகம் கடித்தால் 80 வீதம் இறப்புதான். உடனடியாக பாம்பின் எதிர் நஞ்சு செலுத்தினால், சிகிச்சைக்குத் தகுந்தாற்போல் காப்பாற்றப்பட வாய்ப்பு உண்டு. இதுவரை ராஜ நாகம் கடித்து ஒருவர் தான் பிழைத்துள்ளார். அவரும் இதனை பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, கடித்ததால், உடனே பாம்பின் எதிர் நஞ்சு ஒரு நிமிடத்திற்குள் செலுத்தப் பட்டதால், காப்பாற்றப்பட்டார்.
பொதுவாக நாகப் பாம்பு மற்றவர்கள் எதிரில் வரவே வெட்கப்படும். மனிதர்களைக் கண்டால் ஓடிப்போய் புதர், மரம், மறைவான இடத்திற்குப் போய் ஒளிந்து கொல்லும். ஆனால் ராஜநாகம் மனிதர்களை எதிர்த்து நின்று தரையிலிருந்து சுமார் 6 அடி உயரம் எழும்பி படமெடுக்கும். பாம்புகள் புத்திசாலித்தனம் நிறைந்தவை. ஆபத்தான பகுதியை தவிர்த்து விடும்., ராஜநாகம் இந்தியா , மலேசியா ,தென்சீனா, வியட் நாம் போன்ற தெற்கு ஆசியப் பகுதிகளிலும், வடக்கு ஆப்பிரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும் காணப்படுகிறது.
ராஜ நாகத்தின் சீறும் சத்தம், நாய் உறுமும் சத்தம் போலவே கேட்கும். பாம்பின் உடல் வளர்ந்தவுடன், ராஜநாகம் வருடத்தில் 4 -6 முறை தன் தோலை உறிக்கும். ஆனால் குட்டி பாம்புகள் மாதம் ஒரு முறை தோல் உறிக்கும். தோல் உறிக்கும் காலகட்டத்தில், பாம்பு தான் பழைய தோலை உறிப்பதற்காக ஏராளமாய் தண்ணீர் குடிக்கும். ராஜநாகம் மற்ற பாம்புகளைவிட ரொம்பவும் சாதுரியமனவை. ராஜநாகம் பொதுவாக, தான் சுற்றிவளைக்கப் பட்டாலும் கூட, தப்பித்து ஓடவே முயற்சி பண்ணும், தப்பிக்க வழியில்லை என்றால், அல்லது முட்டைகள் தாக்குதலுக்கு உட்பட்டால் மட்டுமே மற்றவர்களை கொத்தும். இது ராஜநாகத்துக்கு மட்டுமல்ல எல்லா பாம்புகளுக்கும் பொருந்தும்.
எந்த பாம்பும் பொதுவாக மனிதர்களை விலங்குகளை தேடித் போய் தாக்குவதில்லை. தான் தாக்கப்படும்.பாதிக்கக்கபடும் நிலை ஏற்பட்டாலேயே, பிறர் மேல் தாக்குதல் நிகழ்த்துகின்றன. பாம்பின் விடம் என்பது தன் இரையை, உணர்விழக்கச் செய்வதற்காக, இயற்கை அளித்த சொத்து. ராஜ நாகத்தின் இயற்கை எதிரி கீரிதான். இதற்கு பாம்பின், நரம்புநஞ்சை முறிக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது. பொதுவாக ராஜ நாகம் காடுகளில்தான் வாழுகின்றன. நீர்நிலைகளில் நிரந்தர வெப்பம் உள்ள இடத்தில் வாழ்கின்றன.
ராஜ நாகம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள்!
Text here
About This Blog
Lorem Ipsum
Visitors
Lorem Ipsum
Lorem
Labels
- cont.kadurai (6)
- interview (2)
- kadurai (19)
- Katturai (3)
- medicin (2)
- nc2 (269)
- nc5 (1)
- NEWS (2)
- news center 2 (1)
- puthinam (2)
- srilanka (9)
- srilanka news (18)
- techno (4)
- world (24)
- கட்டுரை (12)
- கவிதை (3)
- நூல் விமர்சனம் (1)
Advertise
Moto GP News
கட்டுரை
srilanka news
Formula 1 News
Sport News
nc2
Featured Content Slider
Powered by Blogger.
Search Wikipedia
Search results
0 comments
Write Down Your Responses