சர்வதேச நாணய நிதிய புதுப்பிக்கப்பட்ட அறிக்கை உலக பொருளாதாரச் சரிவை எடுத்துக்காட்டுகிறது. Nick Beams
உலக நிதிய நெருக்கடியின் வெடிப்பு ஐந்தாம் ஆண்டு நிறைவை அணுகுகையில், “இயல்பான” நிலைமை என முன்பு கருதப்பட்டதிலிருந்து உலகப் பொருளாதாரம் மேலும் அப்பால் நகர்ந்து விட்டது. இந்த வாரம் சர்வதேச நாணய நிதியம், உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை மீண்டும் குறைத்தது. இது, கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஐந்தாவது இத்தகைய கீழ்நோக்கிய திருத்தமாகும். தற்போதுள்ள புதுப்பிக்கப்பட்ட
அறிக்கையையுடன் இணைந்த குறிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில், வளர்ச்சி பற்றி கூடுதல் மதிப்பீடு செய்யப்பட்டதை எடுத்துக்காட்டுவதுடன், இது உலகப்பொருளாதாரத்தின் கட்டுமான மாற்றத்தை கணக்கில் எடுக்காததால் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகும்.
சர்வதேச நாணய நிதியம் ஏப்ரல் மாதம் 3.3% வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருந்த பின்னர் 2013க்கான உலக வளர்ச்சிக் கணிப்பை 3.1% எனக் குறைந்துவிட்டது. 2014 க்கான விரிவாக்கம் 4% இருக்கும் என்று முன்னதாகக் கணித்தபின் அதனை 3.8% எனக் குறைத்துவிட்டது.
கீழ்நோக்கி செல்வதற்கான பொறுப்பாக அது மூன்று முக்கிய காரணிகளை சுட்டிக் காட்டியுள்ளது. அவையாவன, எழுச்சி பெறும் சந்தைப் பொருளாதாரங்களில் ஏமாற்றம் தரும் வளர்ச்சி, குறைந்த தேவை மற்றும் நம்பிக்கை இன்மையை ஒட்டி யூரோப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் மந்தநிலை இன்னும் ஆழமடைந்துபோவதுடன் மற்றும் அரசாங்கச் செலவுக் குறைப்புக்களால் அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட குறைந்த வளர்ச்சியை கொண்டிருப்பவை ஆகும்.
உலக வளர்ச்சிக்கு “பழைய ஆபத்துக்கள்” தொடர்கின்றன என்பதுடன் “புதிய ஆபத்துக்களும் வெளிப்பட்டுள்ளதுடன் மற்றும் எழுச்சி பெறும் சந்தைப் பொருளாதாரங்களில் நீண்டகால வளர்ச்சி விகிதக் குறைவு வரும் வாய்ப்பு இருப்பதாக” அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது. வேறுவிதமாகக் கூறினால், இப்பொருளாதாரங்களில் அமெரிக்காவில் குறைந்த வளர்ச்சியை ஈடுகட்டும் வகையில் வளர்ச்சிக்கு வழியில்லை; ஐரோப்பாவிலும் தொடர்ந்து மந்த நிலை நிலவுகிறது. யூரோப் பகுதி 2013ல் 0.6% சுருக்கம் காணும், 2013ல் 1% மட்டுமே வளர்ச்சியடையும்.
ஐரோப்பாவில் சுருக்கம் என்பது சுற்றுவட்டத்தில் உள்ள நாடுகள் எனக் கூறப்படுவதில் சரிவு ஏற்பட்டதால் மட்டும் அல்ல. சர்வதேச நாணய நிதிய தலைமைப் பொருளாதார வல்லுனர் ஒலிவியே புளோஞ்சார்ட், பிரதான பிரான்ஸ், ஜேர்மனிய பொருளாதாரங்களில்கூட, “வருங்காலம் பற்றி பொது நம்பிக்கை இல்லாத்தன்மை இருப்பது போல் தோன்றுகிறது” என்றார். இக்கருத்து மறுநாளே ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி எதிர்பார்த்ததைப் போல் இரு மடங்காக 1% இனால் மே மாதம் விழுந்ததால் நிரூபிக்கப்பட்டது.
சீனா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் குறைவான வளர்ச்சிக்கு விஷேட காரணங்கள் இருக்கையில், ஒரு காலகட்டத்திற்குரிய காரணம் மட்டுமல்லாது மொத்தப் போக்கின் அடித்தளத்தில் மெதுவாகும் தன்மை உள்ளது என்றார் புளோஞ்சார்ட். “இந்நாடுகள் நெருக்கடிக்கு முன்பு விரைவாக வளர்ச்சியடைந்தது போல் இனி அடையப்போவதில்லை என்பது தெளிவு” என்றார் அவர்.
புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை உடனடியாக தொடர்ந்து, சீனாவின் வணிகம் பற்றிய தரவுகள் 2013 இன் முதல்பகுதியில் சராசரியாக 10.4% சதவிகிதம் அதிகரித்தபின் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாத ஏற்றுமதிகள் 3.1% சரிந்தன எனக் காட்டின.
சீனாவும் பிற “எழுச்சி பெறும் சந்தைகளும்” அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் தங்கள் முக்கிய பொருளாதார ஏற்றுமதிச் சந்தைகள் என நம்பியிருக்கையில் உலகப் பொருளாதாரத்தின் விரிவாக்கத்திற்கு புதிய அஸ்திவாரம் அளிக்கும் என்னும் கருத்து எப்பொழுதுமே ஒரு கட்டுக் கதைதான். ஆனால் அக்கட்டுக்கதை சில காலம் நீடிக்கமுடிந்ததற்கு காரணம் நிதிய நெருக்கடிக்குப்பின் குறிப்பாக சீன அரசாங்கத்தால் அசாதாரண நிதிய, நாணய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால்தான்.
சீன அதிகாரிகள் ஊக்கப் பொதியாக கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர்களில் ஆரம்பித்தனர். இது குறிப்பாக உள்ளூர் அரசாங்கங்களுக்கு கடன் கொடுப்பதை பெருக்கி நிதியத் திட்டங்களுக்கு நிதி கிடைக்க செய்தது. இதன் விளைவு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மொத்தக் கடனின் விகிதம் சீனப் பொருளாதாரத்தில் 2008ல் 115% என்பதில் இருந்து 173% என மதிக்கப்பட்ட அளவிற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் முதலீட்டுப் பங்கு மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் 2007ல் 42% என்பதில் இருந்து 2013ல் 47% என உயர்ந்தது.
இந்த ஊக்க நடவடிக்கைகள் ஐரோப்பாவும் அமெரிக்காவும் மீண்டும் எழுச்சிபெற்று ஒரு புதிய ஏற்றுமதி விரிவாக்கத்தை கொண்டுவரும் என்ற அனுமானங்களை கொண்டிருந்தன. ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தில் தேக்கம், ஐரோப்பாவில் சுருக்கும் என்பது சீனாவில் கடன் கொள்கைகள் விரிவாக்கத்தை நீடிக்க முடியாது என்பதை அர்த்தப்படுத்தியது. அவை இப்பொழுது ஒரு கடன்நிறுத்தங்களுக்கு உட்பட்டுவிட்டன.
சர்வதேச நாணய நிதிய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின் முழுமையான முக்கியத்துவம் உலகப் பொருளாதாரத்தில் எந்தப் பகுதியும் ஒரு பொதுவிரிவாக்கத்திற்கு அடித்தளத்தை கொடுக்க முடியாது என்பதுடன், எதிர்காலத்திலும் அத்தகைய வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லை என்பதுதான்.
மேலும், அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு அதன் பணத்தை அச்சடித்துவிடும் திட்டத்தை வெட்டும் நடவடிக்கைகள் எடுக்கையில் ஒரு புதிய நிதிய நெருக்கடி தோன்றுவதற்கான ஆபத்துக்கள் தெளிவாக பெருகியுள்ளன. தற்பொழுது அம்முறைப்படி அது நிதியச் சந்தைகளில் மாதம் ஒன்றிற்கு 85 பில்லியன் டாலர்களை உட்செலுத்தி வருகிறது.
பொருளாதாரத்தின் அடித்தளத்தில் மிகக் குறைவான வளர்ச்சி விகிதங்களும் தேக்க நிலையும் இருக்கையில் இப்படி மிக எளிதாக ரொக்கக்கடன் கொடுத்துள்ளமை அமெரிக்கப் பங்குச் சந்தையை புதிய உயரங்களுக்கு ஏற்றியதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அதிக பங்கு விலைகள் அதிக இலாபங்களால் தக்க வைக்கப்பட்டவரை, இவை மிருகத்தன செலவுக் குறைப்புக்களை தோற்றுவித்தனவே ஒழிய விரிவடைந்த சந்தைகளின் விளைவாக வருமான வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
ஆனால் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வந்துள்ள ஒரு சமீபத்திய அறிக்கையின் படி, இலாபங்களை தக்கவைத்துக்கொள்ள வருமான ஏற்றத்தை நிறுவனங்கள் நாடுகையில் இந்த வழிவகை முடிவிற்கு வரலாம். ஆனால் நிறுவனங்களின் வருமானம் S&P 50 குறியீட்டின்படி ஒராண்டிற்கு முன்புடன் ஒப்பிடும்போது 1%தான் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தைகள் ஏற்றம் பெற்றாலும், மத்திய வங்கி கூட்டமைப்புத் தலைவர் பென் பெர்னன்கே கடந்த மாதம் மத்திய வங்கிக் கூட்டமைப்பு பணத்தை அச்சடித்துவிடுவதை வெட்டும் கருத்தை கொண்டிருக்கிறது எனக்கூறியவுடன் ஒரு சரிவு ஏற்பட்டது. எனவே இக்கொள்கையை உண்மையில் நடைமுறைப்படுத்தினால் புதிய கொந்தளிப்பிற்கு வகை செய்யலாம்.
நிதிய ஊக்கம் குறைந்த அளவு திரும்பப் பெறப்பட்டாலும், அது எழுச்சி பெறும் சந்தை, வளரும் பொருளாதாரங்கள் என்பவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் ரொக்கம் திரும்பப் பெறப்பட்டு அமெரிக்காவிற்கு திருப்ப அனுப்பப்படுகிறது. சற்றே கவனமான சொல்லாட்சியை பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியம், “நலிந்த வளர்ச்சி சாத்தியம்”, “நீடித்த விரைவான கடன் வளர்ச்சியில் இருந்து ஏற்படும்” “சாத்தியமான பின்விளைவுகள்” ஆகியவை “நிதிய உறுதிப்பாட்டு ஆபத்துக்களை” அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளது.
பணத்தை அச்சடித்துவிடுவதை மத்திய வங்கிக் கூட்டமைப்பு வெட்டுமானால் நாணய மதிப்பீடுகள் குறைப்பை தூண்டிவிடுவதுடன், எழுச்சி பெறும் சந்தைகளில் இருந்து விரைவாக மூலதன வெளியேற்றமும் இருக்கும். இது அமெரிக்கச் சந்தைகளை திருப்பிதாக்கும் ஒரு நிதிய நெருக்கடியை தூண்டும்.
அக்காலகட்டத்தின் பொருளாதாரத்தில் உடனடியான திருப்பங்கள் எப்படி இருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அறிவிப்பு நீண்டகால விளைவுகளையுடைய அரசியல் முக்கியத்துவத்தை கொண்டதாகும். எந்தவொரு அர்த்தமுள்ளவகையிலும் பொருளாதார மீட்சிக்கான வாய்ப்பு இல்லை என்னும் சூழ்நிலையில், உயரும் வேலையின்மை, ஊதியக் குறைப்புக்கள், சமூகநலச் செலவுகளில் வெட்டுக்கள் ஆகியவை நிரந்தரமாகிவிட்டன என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.
ஆளும் உயரடுக்குகளால் செயல்படுத்தப்படும் சமூக எதிர்ப் புரட்சி வேலைத்திட்டத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் தன் சுயாதீன நலன்களுக்காக போராட வேண்டும். இதற்கு, சோசலிச வேலைத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கம் கொண்ட அரசியல் வேலைத்திட்டத்தை நிறுவும் நோக்கத்தை அது கொண்டிருக்க வேண்டும். இது வங்கிகள், பெரும் நிறுவனங்கள் பொது உடைமையாகவும், ஜனநாயக கட்டுப்பாட்டினுள்ளும் கொண்டுவரப்படுவதுடன் ஆரம்பிக்கவேண்டும்.
0 comments
Write Down Your Responses