பிரபாகரன் ஒருபோதும் தனிநாடு கோரவில்லையாம். சிறிதரன் எம்பி
சுமார் 30 வருடங்கள் ஆயுதப்போராட்டத்தினை நடாத்திச்சென்ற புலிகளின் தலைவர் பிரபாகரன் மாத்திரம் அல்ல அதற்கு முன்னர் அறவழியில் போரிட்ட தமிழ் தலைவர்கள் கூட ஒருபோதும் தனிநாடு கோரவில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதுவே என்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அங்கு பேசிய அவர் ரெலோ அமைப்பின் தலைவர் தங்கத்துரை அவர்கள் „நாங்கள் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல' எனக் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அவர் ஆயுதப்போராட்டம் ஒன்று எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்றும் நடைபெற்ற போராட்டம் முற்றிலும் தவறானது என்று பேசினார்.
அராலித் தெற்கு பகுதியில் களவத்துறை விளையாட்டுக்கழகம்நாடாத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய இவரது பேச்சு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலி ஆதரவாளர்கள் மத்தியில் குளப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வு எனச் சிங்கக்கொடியினை தூக்கி நின்றபோது புலம்பெயர் தமிழர்களின் வெறுப்புக்கு உள்ளாகியிருந்தார். அத்துடன் புலிகளின் தலைவர் தனிநாடு கோரியே போராடியதாக புலி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் சிறிதரன் இவ்வாறு தெரிவித்திருப்பது , சிறிதரன் திட்டமிட்டவகையில் பிரபாகரனை கொச்சைப்படுத்துவதாக புலி ஆதரவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் சிறார்களை விளையாட்டுக்கு என அழைத்து அவர்கள் அறியாத அரசியல் கருத்துக்களை திணிப்பதற்கு ஒத்தாசை புரிந்த தரப்பினர் மீதும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
0 comments
Write Down Your Responses