பனமாக் கால்வாய்க்குள் ஏவுகணையுடன் வந்த வட கொரியா கப்பல்
கரீபியன் தீவுப் பகுதியில் உள்ள கியூபா நாட்டிலிருந்து வடகொரியாவிற்கு சொந்தமான கப்பல் ஒன்று பனமா கால்வாய்ப்பகுதியில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளதுடன் கப்பலில் இருந்த 35 சிப்பந்திகளும் பனாமா அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்களன்று கியூபாவில் இருந்து வந்த அந்த வடகொரியா கப்பலை பனமா நாட்டு போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தடுத்து சோதனை மேற்கொண்டபோது கப்பலில் இருந்த 35 சிப்பந்திகளும் பதற்றம் அடைந்து சோதனையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எனவே சந்தேகம் அடைந்த பனாமா அதிகாரிகள் அந்த கப்பலில் இருந்த சர்க்கரை மூட்டைகளை விலக்கி பார்த்தபோது, கப்பலில் கண்டம் விட்டு கண்டம் தாக்கு ஏவுகணைகள் மற்றும் இராணுவ தளவாடங்கள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
ஐ.நா. சபையின் விதிமுறைகளை மீறி ஆயுதங்கள் கடத்தப்பட்டதை கண்ட பனமா அதிகாரிகள் உடனே தங்களது துறைமுகத்திற்கு அந்த கப்பலை கொண்டு வந்ததுடன் அதிலிருந்த சிப்பந்திகள் அனைவரும் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் இதுகுறித்து உலக நாடுகள் விசாரிக்க வேண்டும் என்று பனமா கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments
Write Down Your Responses