மதுரை மீனாட்சி அம்மனுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என்று மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்ததால் கோயிலின் நான்கு கோபுர வாசல்களிலும் ஒரு S.I தலைமையில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கோயிலின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் கோயிலுக்குள் பைகள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள கடைகளில் பேட்டரிகள், எமர்ஜென்சி விளக்குகள் போன்ற பொருட்கள் விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டர் சாஜித்குமார் தலைமையில் 5 பேரும், அதி விரைவு படை கமாண்டர் ஸ்ரீ குமார் தலைமையில் ஒரு பிரிவினரும் நேற்று முன்தினம் கோயிலின் கருவறை, வரைபடம் மற்றும் கடைகள் ஆகியவற்றை சோதனையை மேற்கொண்டுள்ளதுடன் கோயில் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளன.
0 comments
Write Down Your Responses