தாலிபான்களை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலம் மாத்திரமே தோற்கடிக்க முடியும் -நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தானில் செயற்படுகின்ற தாலிபான் பயங்கரவாதிகளை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலம் மாத்திரமே தோற்கடிக்க முடியும் எனவும், நடைமுறையில் உள்ள பிரச்சினைக்கு அரசியல் ரீதியான முடிவினைக் காணமுடியும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
நவாஸ் ஷெரீப், தாலிபான்களுடன் சற்று ஒத்துப்போகக்கூடியவர் என்பதை பலரும் அறிவர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர், பிரதமர் பதவியைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 12 ஆண்டுகளாக தாலிபான்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயுள்ள நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே அவர் முற்பட்டு வருகின்றார்.
நவாஸ் ஷெரீப் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தன்னை அர்ப்பணிப்பாராயின், தங்களும் அதற்கு உடன்படுவோம் என தாலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். எதுஎவ்வாறாயினும் இதுவரை சமாதானப் பேச்சுவார்த்தைக்கான நாள் குறிக்கப்படவே இல்லை.
அமெரிக்காவின் ட்ரோன வான் தாக்குதலில் தலிபான் அமைப்பின் பிரதித் தலைவரான வலீயுர் ரஹ்மான் கொலைசெய்யப்பட்டமையே அதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்கப் படை, ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் எல்லைப் புறத்தையும் மீறி ஏவுகின்ற ட்ரோன் வான் தாக்குதலை பிரதமர் நவாஸ் ஷெரீப் வன்மையாகக் கண்டிப்பதும் இதற்குக் காரணமாகவுள்ளது.
அத்தாக்குதல்களினால் சாதாரண பொதுமக்கள் பலரும் கொலை செய்யப்படுவதால் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக தனது பலத்த எதிர்ப்பைக் காட்டுவதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளார் எனவும் தெரியவருகின்றது. பாகிஸ்தான் அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய சவால் பயங்கரவதமாகும் எனவும் நவாஸ் ஷெரீப் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses