ஸவுதி பிறநாட்டு பணியாளர்களை ஆதரிக்க முன்வந்துள்ளது இனிப்பான செய்தியே!
வீட்டுப் பணிப் பெண்களுக்கும் சாரதிகளுக்கும் நல்ல காலம் பிறந்திருக்கு....
வீட்டுப் பணியாளர்களாகச் செல்லக் கூடிய இலங்கை மற்றும் பிறநாடுகளைச் சேர்ந்த ஆண் பெண்களுக்கும் வீட்டுச் சாரதிகளாகச் செல்பவர்களுக்கும் பல புதிய வரப்பிரதாசங்களை வழங்குவதற்கு ஸவுதி அரேபிய அமைச்சரவை முன்வந்துள்ளதாக ஸவுதி அரேபிய செய்திப் பத்திரிகையொன்று தெரிவிக்கிறது.
ஸவுதி அமைச்சரவையினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தில் ஸவுதிக்கு வருகின்ற பிறநாட்டு பணிப்பெண்களுக்கும் ஆண் வீட்டுப் பணியாளர்களுக்கும் வீட்டுச் சாரதிகளுக்கும் நாளொன்றுக்கு ஒன்பது மணித்தியாலங்கள் ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாரத்திற்கொருமுறை ஒரு நாள் விடுமுறையும், பிணி விடுமுறையும் வழங்கப்பட வேண்டும். அத்தோடு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு மாத சம்பளத்துடன் தாய்நாடு செல்வதற்கான விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.
இந்தச் சட்டத்தை மீறுகின்ற எசமானர்கள் 10 000 ஸவுதி ரியால்களை (350000 இலங்கை ரூபா) அபராதமாக செலுத்த வேண்டிவரும். அத்தோடு அவர்கள் பணியாளர்களைப் பெறுவதும் தடை செய்யப்படும்.
தற்போது 20 இலட்சத்திற்கும் அதிகமான ஆண் பெண் பணியாளர்கள் ஸவுதி வீடுகளில் பணிபுரிகின்றனர்.
இந்தச் சட்டத்தின் மூலம் பிறநாடுகளிலிருந்து ஸவுதி செல்கின்ற பணியாளர்கள் நினைத்த போதெல்லாம் தங்களது எசமானகர்களை மாற்ற வேண்டியேற்படாது எனவும் அந்தச் செய்திப் பத்திரிகை குறிப்பிடுகிறது.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses