பொலிஸ் அதிகாரத்தை அதிகரிப்பதானது 13 இனை முறிக்கும் செயலாகும்! - பசில்
1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்து – இலங்கை ஒப்பந்தத்திற்கேற்ப் பொலிஸ் அதிகாரத்தை அதிகரிகரிப்பதானது, அந்த உடன்படிக்கையை மீறும் செயலாகும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
அந்த ஒப்பந்தத்தில்அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடும் அமைச்சர், முழு நாட்டுக்கும் ஒரு பொலிஸ்தான் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுறுத்துகிறார்.
அதற்கேற்ப பொலிஸ் அதிகாரம் ஒரு பொலிஸிடம் மாத்திரமே இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார் பசில் ராஜபக்ஷ.
இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற ‘த ஹிந்து’ பத்திரிகையுடனான நேர்காணலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள மக்களுக்கு வீதி வசதி, புகையிரத வீதி, பாடசாலை, வைத்தியசாலை, நீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் பலவும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது எனவும், அதற்கேற்ப பாராளுமன்றத்தில் விசேட சபையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அந்த விசேட சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எதிர்க்கட்சியோ சமுகந்தரவில்லை என்பதையும் அவர் அந்நேர்காணலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்து – இலங்கை உடன்படிக்கைக்கு ஏற்ப, நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போலவே, வடக்கு கிழக்கு பாதுகாப்பு மற்றும் சட்டத்தை பிரயோகிப்பதற்கு ஒரே முறையையே கையாளவேண்டியதன் தேவையுள்ளது என்பதையும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அமைதிச் சூழல் காணப்பட்டால் அது இந்தியாவுக்கும் உகந்தது என்றும் அது, இரு நாடுகளுக்குமிடையே முதலீடுகளை மேற்கொள்வதற்கு முக்கியமானதொன்றாகும் என்றும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses