மாடு அறுப்பதைத் தடுப்பதற்காக 1000 ஏக்கர் விவசாய நிலத்தை வழங்குகிறது பாதுகாப்பு அமைச்சு!
பணம் கொடுத்து விடுதலை செய்யப்படுகின்ற மாடுகளைக் காப்பதற்காக சேருவில சோமவத்தி வீதியிலுள்ள 1000 ஏக்கர் விவசாய நிலம் மிக விரைவில் கிடைக்கவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு விடுத்த விண்ணமொன்றின் பேரில் அதற்கு விருப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த இடம் வழங்கவும், விடுதலை செய்யப்படுகின்ற மாடுகளை எடுத்துச் செல்வதற்காக புகையிரத மற்றும் லொறி வசதி வழங்கவும் பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
எனவே, விற்பதற்காக அல்லது இறைச்சிக்காகக் கொண்டுசெல்லப்படுகின்ற மாடுகளைக் காப்பதற்காக விரும்புகின்ற பக்தர்கள் சிங்கள ராவய அமைப்புக்கு தகவல் வழங்குமாறு தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மாடு அறுக்கப்படவுள்ள இடங்களில் இறப்பதற்காக காத்திருக்கக்கூடிய மாடுகளை பாதுகாப்பது இயலாத கரும்ம் என்பதால், இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஓர் அமைப்புக்கு மாடுகளை வழங்குவது சிறந்த்தாகும் எனவும் தேர்ர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ராவய அமைப்பு கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் கதிர்காம்ம் கிரிவிகாரை தொடங்கி ஜனாதிபதி மாளிகை வரை மாடுகள் அறுப்பதற்கு எதிரான பாதயாத்திரையொன்றை மேற்கொண்டது. கடைசியில் மாடுகள் அறுப்பதை நிறுத்தமாறும் அதற்குப் பதிலாக பாதுகாக்கப்படுகின்ற மாடுகளை தொழில் வழங்க்க்கூடியதொரு திட்டத்திற்கு பயன்படுத்துமாறும் கூறி ஜனாதிபக்கு ஒரு கடித்த்தை சிங்கள ராவய இயக்கம் கையளித்த்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
0 comments
Write Down Your Responses