மஸாஜ் பெண்ணிடம் பாலியல் சேஷ்டை; முன்னாள் ராஜதந்திர அதிகாரிக்கு அபராதம்
மஸாஜ் செய்துகொண்டிருந்த பெண்ணின் மார்பை தடவியதாக, இலங்கையின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரும் முன்னாள் ராஜதந்திர சேவை அதிகாரியுமான டியுடர் குணசேகர (வயது 77), இங்கிலாந்து நீதிமன்றத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஆவார்.
பிரபலமான மஸாஜ் கிளப்பில் பெண், இவரது தோளை மஸாஜ் செய்துகொண்டிருந்த போது இவர் அப்பெண்ணின் மார்பை எட்டிப்பிடித்துள்ளார்.
இதனால், கலவரமடைந்த அண்பெண், அபாயமணி பொத்தானை அழுத்திவிட்டு வெளியே பாய்ந்துள்ளார்.
உரிய கட்டணத்துக்கு மேலாக 50 பவுண்கள் தந்தால் தன்னால் சிறப்புச் சேவை செய்ய முடியும் என்று மேற்படி பெண் கூறினார் என்ற இவரது வாதம் நீதிமன்றில் எடுபடவில்லை.
இந்நிலையில், தண்டமாக 1000 பவுண்களும் நட்டஈடாக 1000 பவுண்களும் வழக்கு நடத்திய அரச செலவாக 1250 பவுண்களும் செலுத்தும்மாறு நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.
குணசேகர, தனது பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார். இலங்கையில் அவர் 25 ஏக்கல் காணியொன்றில் வசதியாக வாழ்ந்து வருபவராவார். அத்துடன், இவர் போலந்துக்கான இலங்கையின் தூதுவராகவும் இருந்துள்ளார்.
அவ்வாறிருந்தும், இவர் வறுமையைக் காரணம் காட்டி வழக்கை எதிர்கொள்வதற்காக சட்ட உதவி நிதியையும் பெற்றிருந்தார். இவருக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றமிழைத்தார் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சட்ட நிதி உதவி பெற்றதன் மூலம் இவர் ஊழல் புரிந்துள்ளாரா என ஆராயுமாறு சட்டச்சேவை ஆணைக்குழுவுக்கு பணித்தார்.
இந்நிலையில் சட்ட உதவி நிதியை இவர் பெற்றார் என்பதை அறிந்த நீதிபதி கோபப்பட்டார். இந்த நீதிமன்றத்தில் கூறப்பட்ட மிகப்பெரிய பொய் இதுவெனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இவரது வழக்குக்காக பிரித்தானிய மக்கள் ஒரு பென்னிகூட(100 பென்னி 1 பவுன்) செலவளிக்க வேண்டியதில்லை என நீதிபதி கூறினார்.
குற்றப்பணம், நட்டஈடு என்பவற்றுடன் சட்ட உதவி தொகையை பெற்ற பணத்தையும் சேர்த்து 7,420 பவுண் செலுத்தப் பணிக்கப்பட்ட இவரை பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்க வேண்டுமென நீதிமன்றம் பணித்துள்ளது.
0 comments
Write Down Your Responses