யாழில் மின் விநியோகத்தை மேற்கொள்ள புதிய எரிபொருள் சேகரிப்பு நிலையம்.
யாழ் மாவட்டத்திற்கு மின்சாரத்தை விநியோகிப்பதற்காக எரிபொருள் சேகரிப்பு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்டத்தில் தற்போது 90 வீதமான பிரதேசங்களுக்கு மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சின் திட்டமிட்ட செயல்பாடுகள் காரணமாக இவ்வாறு மின்சாரத்தை விநியோகிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இம்மாவட்டத்தின் மின்சார விநியோகத்தை பரவலாக முன்னெடுப்பதற்காக மின் உற்பத்தி நிலையங்கள் பல ஆரம்பிக்கப்பட்டன. இதன் காரணமாக யாழ் குடாநாட்டிற்கு மின் விநியோகத்தை மேற்கொள்வதற்காக புதிய எரிபொருள் சேகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறந்த முறையில் மின்சாரத்தை விநியோகிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அபிவிருத்தி திட்டங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 11 பில்லியன் ரூபா செலவில் கொழும்பில் பூமிக்கு அடியில் மின்சார தொலை தொடர்பு தன்னியக்க கட்டமைப்பு ஒன்றையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments
Write Down Your Responses