சரவணபவான் மீது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கல் வீச்சு. பொலிஸில் முறைப்பாடு.
இன்று யாழ் பல்கலைக்கழகத்தினுள் நுழைய முயன்ற சரவணபவான் எம்பி மீது மாணவர்கள் கற்களை வீசியுள்ளனர். கல்வீச்சிலிருந்து சிங்கள பொலிஸாரினால் தமிழ் எம்பி சரவணபவான் காப்பாற்றப்பட்டுள்ளார். இதேநேரம் சரவணபவானுடன் சென்ற உதயன் பத்திரிகை படப்பிடிப்பாளர்கள் சிலர் காயமடைந்துள்ளதுடன் கமரா ஒன்றும் சேதமடைந்துள்ளதாக சரவணபவன் சற்று முன்னர் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு குதிரை கஜேந்திரனின் அடியாட்கள் சிலர் திட்டமிட்டிருந்தனர். இதன் பொருட்டு யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் தனபாலசிங்கம் தலைமையில் பிரசன்ன , கோகுலன் உட்பட பலர் யாழ் பல்கலைக் கழக வளாகத்தினுள் நுழைந்திருந்துள்ளனனர். இவர்கள் பாலசிங்கம் விடுதியில் நான்காம் மாடியில் இதற்காக ஏற்பாடுகளை செய்திருந்துள்ளனர். நிகழ்வுகளின்போது விடுதியிலுள்ள நான்கு, ஐந்து கட்டில் மெத்தைகளை எரிப்பது எனவும் திட்டமிடப்பட்டிருந்தாம்.
ஏற்பாடுகளை அறிந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் யாழ் பல்கலைக்கழகத்தினை சுற்றிவளைத்ததுடன் பாலசிங்கம் விடுதிக்கு சென்றபோது அங்கு மாணவர்கள் யாவரும் தமது அறைகளில் அமைதியாக இருந்ததை அவதானிக்க முடிந்தாக அவ்வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.
சரவணபவான் கமராக்களுடன் நுழைவதை கண்ட மாணவர்கள் அறைகளிலிருந்து போத்தல்கள் மற்றும் பாரமான பொருட்களால் எம்பி மீது எறிந்துள்ளனர்.
இவர்கள் சரவணபவான் பிரச்சாரத்திற்கு தங்களை படமெடுக்க வருகின்றார் என்ற ஆத்திரத்தில் எறிந்தார்களா அன்றில் இராணுவத்தின் படப்பிடிப்பு பிரிவு என்ற கணிப்பில் எறிந்தார்களா? என்பது இதுவரை தெளிவில்;லை. காரணம் சரவணபவான் அங்கு செல்லுமபோது பலத்த பாதுகாப்புடனேயே சென்றுள்ளார்.
0 comments
Write Down Your Responses