காதல் எனும் போர்வையில் பாடசாலை மாணவியின் கற்பை சூரையாடிய இளைஞன்
யாழ்.பண்டத்தரிப்பைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோக செய்த அதே இடத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞனையும் அவருக்கு உடந்தையாக இருந்த இருவரையும் யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் பண்டத்தரிப்பைச் சேர்ந்த பாடசாலை மாணவியை காதலிப்பதாக் கூறி ஏமாற்றி யாழ். கச்சேரி கிழக்கு பாடசாலை வீதிலுள்ள வீடொன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனும் அவருக்கு உதவியாக இருந்த மேலும் இருவரும் எமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். என்றார்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று குறித்த பாடசாலை மாணவி வீட்டை விட்டுச் சென்றுள்ளார். இதனால் வீட்டிலுள்ளோர் அவர் காதலிப்பவரோடு சென்றுவிட்டதாக எண்ணிக்கொண்டனர். குறித்த இளைஞனால் யாழ். கச்சேரி கிழக்கு பாடசாலை வீதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட அம் மாணவி அங்கு வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். இவர்களுடன் மேலும் இரு இளைஞர்களும் அவ்வீட்டில் அன்றிரவு தங்கியுள்ளனர்.
மறுநாள் காலை அம்மாணவியை குறித்த இளைஞர் குழு வாகனம் ஒன்றில் ஏற்றிவந்து அவரின் வீட்டுக்கு அருகாமையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளது.
மயக்கமடைந்த நிலையில் வீட்டிற்குச் சென்ற மாணவி தான் பாலியல் பலாத்தாரத்திகுட்பட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டையடுத்து பண்டத்தரிப்பு நகரில் உணவு விடுதியை நடத்திவரும் இவ் இளைஞர் குழுவை இளவாலைப் பொலிஸார் கைது செய்தனர். இருப்பினும் காலையில் கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் குழப்பமடைந்த மாணவியின் பெற்றோர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இம் முறைப்பாட்டையடுத்து யாழ். பொலிஸார் அவ் இளைஞனையும் அவருக்கு உடத்தையாக செயற்பட்ட மேலும் இருவரையும் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் நடைபெற்று ஜந்து நாட்கள் கடந்துள்ள போது இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாது இளவாலைக் பொலிஸார் அசட்டையீனமாக நடத்துகொண்டமை பண்டத்தரிப்பு பிரதேச மக்களை சினமடைய வைத்துள்ளது.
இவ்வாறான பல சம்பவங்கள் இப் பிரதேசத்திக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்றபோது அவற்றுடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாது இளவாலைப் பொலிஸார் நடத்து கொள்கின்றமை அப்பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை உண்டாக்கி வருகின்றது.
0 comments
Write Down Your Responses