இலங்கையின் 1வது செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது
இலங்கையின் முதலாவது செயற்கை கோள் நேற்று இலங்கை நேரப்படி மாலை 3.45 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 22 ஆம் திகதி குறித்த செயற்கைகோள் விண்ணிற்கு ஏவப்படவிருந்த நிலையில் காலநிலை சீரின்மையால் 5 நாட்கள் தாமதமாகி நேற்று மாலை விண்ணிற்கு ஏவப்பட்டது.
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இச் செயற்கைகோள் சீனாவில் தயாரிக்கப்பட்டது.
இந்த செயற்கை கோளை கட்டுப்படுத்துவதற்கான மத்திய நிலையம் பல்லேகலையில் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை கோள் அனுப்பப்பட்டதன் மூலம் உலகில் செயற்கைகோள்களை சொந்தமாக வைத்துள்ள நாடுகளில் 45 வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்தமாக தொலை தொடர்பு செயற்கை கோளை கொண்டுள்ள 3 வது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.
0 comments
Write Down Your Responses