மாந்திரிக பூஜைக்காக 15 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை
மாந்திரிக பூஜையொன்றின் போது 15 வயது சிறுமியொருவரது கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் பொலிஸார் தெரிவித்ததாவது
சாமி உரு ஏறப்பட்ட தம்பதியினர், 15 வயது சிறுமியொருவரின் கழுத்தினை அறுத்து அவரை கொலை செய்துள்ளனர்.இதில் அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து குறித்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 7 வயது சிறுமியொருவரை தீயிலிடவும் மேற்படி தம்பதியினர் முயற்சித்த நிலையில், அச்சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்த பூஜையின் போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments
Write Down Your Responses