கம்பஸ் பெடியளிட்ட கூட்டமைப்பு எம்.பி வாங்கி கட்டிய கதை தெரியுமோ! -ஊர்கிழவன்
வணக்கம்...வணக்கம்...உங்களை நல்லாயிருக்கிறியளா? எண்டு நான் கேட்டால் உங்களுகெல்லாம் ரொம்ப கோவம் வரும் எண்டு எனக்கு தெரியும். காரணம் பாருங்கே உந்த கம்பசில பொடியளுக்கு பொலிசுக்காரும் ஆமியும் சேர்ந்து நல்ல அடியெண்டு ஒரே செய்தி தீ போல பரவிக்கிடக்குது.
உண்மையில் எங்கட பெடியளுக்கு உந்த பொலிசுக்காரர் அடிச்சதை என்னாலையும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது பாருங்கே. என்ன தான் இருந்தாலும் அதுகள் பிள்ளைகள் எண்ட எண்ணம் எங்க அரச அதிகாரிகளுக்கும் இல்லை எண்டது தான் வேதனையாயிருக்கு.
அதுகளுக்கு நல்லதெது கெட்டதெது எண்டு தெரியாத வயசு. இப்ப கம்பசில இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கத்திப் போட்டு பிறகு அரசாங்க உத்தியோகம் வேணும் எண்டு தாங்கள் சொந்தமாக எந்த வேலையும் செய்யாமல் இருக்குங்கள். அரசாங்கம் வேலை கொடுத்தால் செய்யும் தொழிலே தெய்வம் எண்டு அரசாங்கதிற்கு விசுறியள பெடி பெட்டைகள் மாறி விடுங்கள்.
சரி இப்ப அதை விடுவோம். உந்த பெடியளுக்கு ஆமியோ! பொலிசோ அடிக்க காரணம் என்வெண்டு பார்த்தால் உவங்கள் பெயடிளை யாரே பின்னால இருந்து உசுப்பேத்தி தான் அவங்கள் மாவீரர் தினம் பிரபாகரன் பிறந்த நாள் எண்டு ஒரே கொண்டாட்டங்களில ஈடுபட்டதால இந்த நிலை ஏற்பட்டது.
அரசும் பாவம் தானே எத்தனை முறை தான் அன்பாக பண்பா சொல்லிச் சொல்லி பார்க்கிறது. கேட்டாத்தானே அவங்கள் கடைசில உதை விட்டு அரச அதிகாரிகள் ஒதுங்கி விட பொலிஸ் வந்து தான் காவலுக்கு இருக்கேக்க பெடியள் ஏதோ தனகி தான் அடி விழுந்ததாக சொல்லுறாங்க.
யாரை நம்புறது எனக்கு உந்த கதை சரியா தெரியாது. ஆனால் ஒரு கதை மட்டும் எனக்கு நல்லா தெரியும். உந்த கூத்தமைப்பு எம்.பியும் தேசியம் பேசுற யாழ்ப்பாணப் பேப்பரின்ர ஓனருமான எம்.பி இந்தப் பிரச்சினையை தன்ர வியாபாராத்திற்கு பயன்படுத்த முயன்று அடிவாங்கியுள்ளார்.
அட நான் யாரை சொல்லுறேன் எண்டு யோசிக்கிறியளா? அது தான் பாய்ச்சல்! சீறல்! எண்டு தன்ர பேப்பரில தானே அறிக்கை விடுற சரவணபவான் எம்.பி தான் அந்த ஆளு.
பெடியளின்ர கோஸ்ரலில பொலிஸ் காவலுக்கு இருக்கேக்க அவங்கள் மாவீரர்தின சுடர் ஏத்த விடுங்கோ எண்டு அடம்பிடிச்சுக்கொண்டே இருந்திருக்கிறாங்க.
இதாண்டா சந்தர்ப்பம் எண்டு உந்த உதயன் ஆசிரியர் சரவணபவானும் அவரின் தேசியப் பேப்பரின்ர ஆசிரியருமான பிறேம் எண்டவரும் வந்து பெடியளுக்கு முன்னால் பெரிய தனமான வேலைகளை செய்ய முயன்றுள்ளனராம்.
இதைப்பார்த்த பெடியளுக்கு கடுப்பாகிட்டு. கடுப்பு வெறுப்பாகி பேப்பரின்ர ஆசிரியருக்கும் எம்.பிக்கும் நல்ல குடுவை பாருங்கோ.
அந்த அடியோட ஓடப்போய் ஆமி அடிச்சுப் போட்டான் எண்டு பொலிஸில் ஒரு முறைப்பாடு வேற போட்டாராம் உந்த மனுஷன்.
அடுத்த நாளும் பொலிசுக்கும் பெடியளுக்கும் அடிதடி ஆனப்பிறகு முதல் நாள் அடிவாங்கினது பத்தாது எண்டு பெடியளிட்ட என்ன முகத்ததோடு வரப்போறன் எண்டு யோசிக்காமல் வந்து நிண்டிருக்கிறார் ஆளு .
பெடியளுக்கு நல்ல கடுப்பாம். பொலிசும் அடிச்சு கோபத்தில இருந்தவங்களுக்கு கடுப்பு உச்சதிற்கு ஏறியிருக்கு பிறகு என்ன செய்திருப்பாங்க எண்டு நான் சொல்ல மாட்டேன்.
நீங்களே யோசியுங்கோ.. சத்தியமாக எம்.பி யின்ர வானை பெடியள் அடிச்சதை நான் பார்த்ததா சொல்லேல்ல சரி நான் வறேன் நீங்களே கண்டு பிடியுங்கள்.
0 comments
Write Down Your Responses