வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்றவர் கைது
வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக சார்ஜாவிற்கு கடத்த முயன்ற நபர்; ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாலை 2.30 மணியளவில் பிரதி சுங்க அத்தியட்சகர் நுவன் அபேநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
இச்சந்தேக நபரிடமிருந்து 70 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்கள் கைப்பற்றப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நாணய தாள்கள் சூட்சுமமான முறையில் பாதணியில் மறைத்து வைக்கப்பட்டு கடத்த முயன்ற போதே கைப்பற்றப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசி, வர்த்தகரான சந்தேக நபர் கொழும்பில் வசிப்பவரென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments
Write Down Your Responses