மாத்தறை ஆதார மருத்துவமனை மருத்துவர் கண்டுபிடிக்கபட்டார்.
காணமல் போனதாக கூறப்பட்ட மாத்தறை ஆதார மருத்துவமனையின் பெண் மருத்துவர் அநுராதபுர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
28 வயதுடைய ஹெரந்தி குலசிங்க என்ற குறித்த மருத்துவர் கடந்த வெள்ளிக்கிழமை தமது கடமைகளை நிறைவு செய்துக்கொண்ட வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இவர் காணாமல் போயிருந்தார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று அநுராதபுரத்தில் உள்ள ஓய்வு மண்டபம் ஒன்றில் இருந்து இவர்; கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தார்.
0 comments
Write Down Your Responses